தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சிவானந்தர்/நல்லதை மட்டும் நாடுங்கள்

நல்லதை மட்டும் நாடுங்கள்

நல்லதை மட்டும் நாடுங்கள்


ADDED : ஆக 08, 2010 09:08 AM

Google News

ADDED : ஆக 08, 2010 09:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பகுத்தறிவு இல்லாத விலங்குகள் கூட தங்கள் வாழ்க்கை முறைகளை இஷ்டம் போல மாற்றிக் கொள்வதில்லை. ஆனால், மனிதன் மனம் போன போக்கில் நடந்து அமைதியை இழந்து வாழ்கிறான்.

* வாழ்க்கையில் வெற்றி பெற நினைவாற்றல் மிகவும் அவசியம். ஞாபகமறதி குணம் கொண்டவர்கள் நிறைய தவறுகளைச் செய்வார்கள். ஞாபகத்திறனை வளர்த்துக் கொண்டால் ஆன்மிக வாழ்விலும் சாதிக்க முடியும். படிக்கும்போதே மாணவர்களின் ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

* புலனடக்கத்தையும், உணவில் கட்டுப்பாட்டையும் பின்பற்றினால் நினைவாற்றல் பெருகும்.

* நாம் செய்யும் செயல் எதுவாக இருந்தாலும் ஆர்வமுடன் பணியாற்றவேண்டும். தியானப்பயிற்சி, மவுனவிரதம் ஆகியவை ஞாபகத்திறனை மேம்படுத்தும்.

* நல்லவிஷயங்கள் எங்கிருந்தாலும் நாடிச் செல்லுங்கள். அவற்றை மனதில் நிலைநிறுத்துங்கள். இறையுணர்வில் ஈடுபாடு கொண்டு வாழ்வை அர்த்தமுள்ளதாக்குங்கள்.

-சிவானந்தர்



Trending





      Dinamalar
      Follow us